பதிவு செய்த நாள்
05
ஜன
2016
11:01
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் சிவன்புரத்தில் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா நடந்தது. கடந்த மாதம், 27ம் தேதி விழா மண்டல பூஜை விழா துவங்கியது. ஐயப்பனுக்கு மகா கணபதி ஹோமம், லட்சார்ச்சனை, கொடியேற்றம், ஸர்ப்ப பலி பூஜை, திருவிளக்கு வழிபாடு, உற்சவ பலி, பள்ளிவேட்டை, ஆறாட்டு, கொடிக்கல்பறை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று பவானி ஆற்றின் அருகேவுள்ள மைதானம் மகாமாரியம்மன் கோவிலில் இருந்து, ஐயப்பன் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் அர்த்தநாரீஸ்வரர் சுவாமி சிலை முன்னே செல்ல, காவடி மற்றும் சிங்காரிமேளத்துடன், அலங்கார ரதத்தில் ஐயப்ப சுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாணவேடிக்கை, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சமிதி நிர்வாகிகள் செய்தனர்.