Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தம்பிக்கலை ஐயன் கோவிலில் ராகு ... மதுரை சத்குரு சங்கீத சமாஜ ஆண்டு விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் உலகம் போற்றும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2016
11:01

பெ.நா.பாளையம்: “இவ்வுலகில் ஒழுக்கத்துடன் வாழ்பவர்களை, உலகம் போற்றும்,” என, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார். கோவை மருதமலை ரோடு, நியூ தில்லை நகர், ஆர்.பி.எம்., வித்யாலயத்தில் கோவை பக்தி சொற்பொழிவு மன்றம் சார்பில், வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: ஒழுக்கத்தோடு வாழ்பவர்கள், எந்த குலத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், போற்றப்படுவர். இதற்கு ஆழ்வார்கள், மகாத்மா காந்தி உள்ளிட்டோர் உதாரணம். இவ்வுலகில் ஆச்சர்யம் என்னவென்றால் வாழ்க்கை நிலையற்றது என தெரிந்தும், நிலையானது என நினைத்து கொள்வதுதான். எமதர்மன், தர்மபுத்திரரிடம், இறந்து கிடக்கும் நான்கு தம்பிகளில் யாரை உயிர்பிக்க வேண்டும் என கேட்கிறார்.

நகுலனை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்கிறார் தர்மபுத்திரர். குந்திதேவி பெற்ற பிள்ளைகளில் நான் ஒருவன் உயிருடன் இருக்கிறேன். என் சின்னம்மா பெற்ற பிள்ளைகளில் ஒருவரும் இல்லை. அதனால் அவர் பெற்ற நகுலனை உயிர்ப்பிக்க வேண்டும் என, அதற்கான காரணத்தையும் கூறுகிறார். அவருடைய சகோதரத்துவத்தை பாராட்டிய எமதர்மன், பாண்டவர்கள் நால்வரையும் உயிர்ப்பிக்கிறார். தர்மனிடம் இருந்து நாம் சகோதரத்துவத்தை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, திருச்சி கல்யாணராமன் பேசினார். வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு ஜன., 14 வரை தினமும் மாலை, 6:00 மணியிலிருந்து, 8:00 மணிவரை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar