பதிவு செய்த நாள்
05
ஜன
2016
11:01
தர்மபுரி: திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. இதில், பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தர்மபுரி அடுத்த மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் மணிகண்டன், மாணவிகள் சுபத்ரா, கிருஷ்ணவேணி ஆகியோர், மாவட்ட அளவில், இரண்டாம் பிடித்தனர். மாணவிகள், செல்வி, ஸ்வேதா, மூலிஷா ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை, தலைமையாசிரியர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.