பதிவு செய்த நாள்
05
ஜன
2016
11:01
நத்தமேடு: நத்தமேடு ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், வரும் 9ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. திருவள்ளூர் ஒன்றியம், பாக்கம் அடுத்துள்ளது நத்தம்பேடு ஊராட்சி. இங்குள்ள ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ளது, வினை தீர்க்கும் வீர ஆஞ்சநேயர் கோவில். இங்கு, வரும் 9ம் தேதி, ஏழாம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா, காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. அதன்பின், காலை 10:30 மணிக்கு, கலச அபிஷேகமும், காலை 11:30 மணிக்கு, வடைமாலை சாத்துதலும், மதியம் 12:00 மணிக்கு, அன்னதான பூஜையும் நடைபெறும். பின், மதியம் 2:30 மணிக்கு, கோவிலிருந்து அனுமன் ரத ஊர்வலம் புறப்பட்டு, திருநின்றவூரில் உள்ள ஏரிகாத்த ராமரை தரிசித்தலும், இரவு 7:00 மணிக்கு, மலர் அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு, மகா தீபாராதனையும் நடைபெறும்.