பதிவு செய்த நாள்
06
ஜன
2016
12:01
குன்னுார்:குன்னுார் அருகே மல்லிக்கொரை ஈரமாசி ஹெத்தையம்மன் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.குன்னுார் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லிக்கொரை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஈரமாசி ஹெத்தையம்மன் கோவிலில், கடந்த நவம்பர்,15ல், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடத்தப்பட்டு, அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை ஆகியவை நடந்தன.இதை தொடர்ந்து, மண்டல பூஜை நிறைவு நாளில், சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஈரமாசி ஹெத்தையம்மனுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம் நடந்தன. விழாவுக்கு, குன்னுார் பிக்கட்டி சற்குரு மடாலய தலைவர் சுப்ரமணியசுவாமி, ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஏற்பாடுகளை மல்லிக்கொரை ஊர் உட்பட பலர் செய்திருந்தனர்.