தூத்துக்குடி;தூத்துக்குடி மாவட்டத்தில் கோயில் யானைகள் கோவை மாவட்டம், தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்டு சென்றன. தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி கோயிலில் உள்ள ஆதிநாயகி, திருக்கோளூர் கோயில் யானை குமுதவள்ளி, இரட்டை திருப்பதி கோயில் யானை லட்சுமி, திருச்செந்தூர் கோயில் யானை தெய்வாணை ஆகிய யானைகள் அனைத்தும் நேற்று மாலை முகாமுக்கு கொண்டு செல்வதற்காக லாரிகளில் ஏற்றப்பட்டன. யானைகள் அனைத்தும் கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள புத்துணர்வு முகாம்களுக்கு நாளை காலை போய் சேரும். அங்கு புத்துணர்வு பயிற்சிகள் வழங்கப்படும்.