பழநி, :பழநியில் தைப்பூச விழா முன்ஏற்பாடுகள் குறித்து சிறப்புகுழுவினர் மலைக்கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.பழநியில் தைப்பூச விழா வரும் ஜன.,18ல் துவங்கி 27 வரை பத்துநாட்கள் நடக்க உள்ளது. இவ்விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலத்தைச்சேர்ந்த இணை ஆணையர் மங்கையர்க்கரசி தலைமையிலான 6பேர் கொண்ட குழுவினர் மலைக்கோயில், படிப்பாதை, பஞ்சாமிர்த தரிசன டிக்கெட் கொடுக்கும் இடங்கள், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும்விடுதிகள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட கூடுதல் வசதிகள் குறித்து கேட்டனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம் தைப்பூச விழா முன்ஏற்பாடுகள் குறித்து விளக்க மளித்தனர். கோயில் கண்காணிப்பாளர்கள், தலைமை பொறியாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.