ஸ்ரீவி., ஆண்டாள் கும்பாபிஷேக பணி தீவிரம்: தங்க விமானத்தை வட்டமிட்ட கருடன்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2016 10:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,கோபுரத்தில் கலசத்தை பொருத்தி பார்த்த போது, வானில் கருடன்கள் வட்டமிட்டன.ஆண்டாள் சன்னதி தங்கவிமான கோபுரத்திற்கு தங்கதகடுகள் பதிக்கும் பணி முடிந்த நிலையில்,ஜன., 20 காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி ஜன.,16 காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா துவங்குகிறது.இதற்காக ஆடிப்பூர கொட்டகையில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் உட்புறத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து பக்தர்கள் வரிசையில் செல்ல தனிபாதை அமைக்கப்படுகிறது. மாடவீதிகளில் ரோடுகள் போடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா களைகட்டி உள்ளது. கருடன்கள்:நேற்று காலை தங்கவிமான கோபுரத்தை சுற்றி பொருத்தபட்டிருந்த கம்புகளை அகற்றி, கலசத்தை பொருத்தி பார்க்கும்போது, நான்கு திசைகளிலும் இருந்த பறந்து வந்த கருடன்கள் கோபுரத்தை பலமுறை வட்டமிட்டன. பின்னர் சில நிமிடங்களில் மறைந்தன.