பதிவு செய்த நாள்
11
ஜன
2016
10:01
பழநி: ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, பழநியில் குவிந்த பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பழநி கோயிலுக்கு தைப்பூசம், சபரிமலை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். பொதுதரிசனம் வழியில் 4 மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணிசுவாமியை தரிசனம் செய்தனர்.பழநி கிரிவீதி, பாதவிநாயகர் கோயில், சன்னதிவீதி, வடக்கு கிரி வீதியில் ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகள், கையேந்தி வியாபாரிகளால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். கிரிவீதிகள், அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, குளத்துரோடு, பூங்காரோடு, திருஆவினன்குடி கோயில் அருகே இருபுறங்களிலும் முறையில்லாமல் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.