சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் குப்பன்துறை அருகே உள்ளது நாகமலை குமாரசாமி ஆண்டவர் கோவில். இந்தக் கோவிலுக்கு, மார்கழி மாத அமாவாசை முடிந்ததும், ஆண்டு தோறும் குப்பன்துறை மக்கள், குருசாமி அமுல்ராஜ் தலைமையில் காவடி எடுத்து சென்று விழா நடத்தி வருகின்றனர். இதற்காக கார்த்திகை முதல் தேதியில் இருந்து மாலை அணிந்து விரதம் இருக்கின்றனர். கோவிலில் காவடி விழா நேற்று நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்து ஆடி வந்தனர். விழாவை முன்னிட்டு நாகமலை குமாரசாமி ஆண்டவருக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது. அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்த பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.