வன்னியப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2016 11:01
முதலியார்பேட்டை: வன்னியப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி, இரவு 7.00 மணிக்கு சீர்வரிசையுடன் ஆண்டாள் புறப்பாடு, 8.00 மணிக்கு நிச்சயத்தார்த்தம், 8.30 மணிக்கு ஆண்டாள் ஸ்ரீநிவசப் பெருமாள் மாலை மற்றும் வைபவம், 9.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 9.30 மணிக்கு ஆண்டாள், ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தனிஅதிகாரி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.