Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கடல்கரையில் ... வைத்தியநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை! வைத்தியநாத சுவாமி கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழா!
எழுத்தின் அளவு:
புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழா!

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
11:01

நடுவீரப்பட்டு: கடலுார் அடுத்த சி.என்.பாளையத்தில் புகழ் பெற்ற புஷ்பகிரி மலையாண்டவர் என்கிற மலைப்பிள்ளையார் கோவிலில் நேற்று 17ம் தேதி காணும்பொங்கலை முன்னிட்டு கரிநாள் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், காளியம்மன், ராஜராஜேஸ்வரி மற்றும் பரிவாரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. விநாயகர் வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:00 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், புஷ்ப பிரபையில் வள்ளி தேவசேனா சுப்ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இன்று 18ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் விநாயகர் தெப்பல் அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். மாங்காதோப்பு திருவிழா: பண்ருட்டி அடுத்த மணம் தவிழ்ந்தபுத்துார் சக்தி விநாயகர் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று நடந்த மங்காதோப்பு திருவிழாவில், காலை 10:00 மணிக்கு விநாயகர் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது, அச்சுமுறிந்து தேர் கவிழ்ந்ததில் ... மேலும்
 
temple news
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் வேடத்தில் வீதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar