காரைக்கால்: காரைக்காலில் காணுப்பொங்கலையொட்டி காரைக்கால் கடல்கரையில் நேற்று பிற்பகல் முதல் மக்கள்கூட்டம் அலைமோதியது. காரைக்காலில் பொங்கல் திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கியது.நேற்றுமுன்தினம் மாட்டுப்பொங்கல் கிராமங்களில் கலைக்கட்டியது. காணுப்பொங்கலான நேற்று திருநள்ளார் சனீஸ்வரன் கோவில்,காரைக்கால் நித்தியாகல்ணாப்பெருமாள் கோவில், திருப்பட்டினம், அம்பாகரத்தூர் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இப்பூஜையில் ஏராளாமனா பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.இதைதொடர்ந்து காரைக்கால் கடல்கரையில் பிற்பகல்1 மணிக்குமேல் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தனது குடும்பத்துடன் கடல்கரையில் கூடினார்.இதில் பெரியவர்கள்,சிறுவர்கள் வீட்டில் செய்த பலகாரங்கள் மற்றும் மதியம் உணவு எடுத்துவந்து கடற்கரையில் காணுப்பொங்களை கொண்டடினார்.பின் சிறுவர்கள் பூங்கா, சறுக்குமரம், பட்டத்துடன் கடற்கரைமணலில் பெரியவர்,சிறுவர்கள் விளையாடி காணுப்பொங்களை சந்தேசமாக கொண்டடினர்.பாதுகாப்பிற்கு பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.