பதிவு செய்த நாள்
19
ஜன
2016
12:01
அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த அழகுராஜ பெருமாள் கோவில் உள்ளது. கட்டடம் சிதிலமடையவே, புதிதாக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நாளை காலை, 9 மணிக்கு மேல், 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. மூன்று நிலை கோபுர விமானங்கள், 17 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் முன்பு சபா மண்டபம், வசந்த மண்டபம், கோவிலைச்சுற்றி சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, ஹயக்கிரிவர், மகாலட்சுமி, ஆண்டாள், விஸ்வசேனர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் கோவில் கட்டப்பட்டுள்ளது.