சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் அம்மன்கோயில் பட்டியில் அமைந்துள்ளது. இங்கு நாளை (ஜன., 20) காலை 6 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன் பின் 7 மணிக்கு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி ஜன., 18 காலை முதல் யாகபூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இன்று காலை 8.45 மணி விசேஷசந்தி, இரண்டாம் கால யாக பூஜைகள், பூதசுத்தி, மாலை 5 மணிக்கு அம்பாள் மூல மந்திர ஹோமங்கள், இரவு 7 மணிக்கு குருஹோரையில் யந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.