ஆடித்தபசு விழாவை முன்னிட்டு நெல்லை பாளை கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2011 12:08
திருநெல்வேலி : ஆடித்தபசு விழாவை முன்னிட்டு நெல்லை தொண்டர் நயினார், பாளை., சிவன் மற்றும் நெல்லையப்பர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆடித்தபசு விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆடித்தபசை முன்னிட்டு நெல்லை டவுன் தொண்டர்கள் நயினார்-கோமதிஅம்பாள் கோயிலில் காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் பிரதோஷ வழிபாடு பூஜையும், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் அமைந்துள்ள கோமதிஅம்பாள் சன்னதியிலும் ஆடித்தபசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பிரதோஷ பூஜையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாளை., திரிபுராந்தீஸ்வரர்-கோமதிஅம்பாள் கோயிலில் ஆடித்தபசை முன்னிட்டு அம்பாளுக்கு மலர் பாவாடை சிறப்பு அலங்காரமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பிரதோஷ பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.