Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் இன்று ... தி.மலை கிராமத்தில் முயல் விடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2016
12:01

சேலம்: சேலம் திருமலைகிரி அருகே, காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம், திருமலைகிரியை அடுத்த வேடுகாத்தாம்பட்டியில், ஓம் காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், இங்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சைலகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பிரச்னையால், அந்த ஊரிலும், 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், வரும், 22ம் தேதி அதிகாலை, 3 மணிக்கு பூச்சாட்டுதலும், பிப்ரவரி, 3,4,5 தேதிகளில் திருவிழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, வருவாய்த்துறை, போலீஸ் துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. தர்மகர்த்தா பழனிசாமி, ஊர்கவுண்டர் பச்சியண்ணன், கோவில் பூசாரி கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. 144 தடை இருப்பதால் கோவில் திருவிழா நடத்துவதற்கு அனுமதியில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட கோவில் விழா கமிட்டியினரும், தடை உத்தரவு நீங்கும் வரை, திருவிழா நடத்த மாட்டோம் என வாக்குறுதி அளித்தனர். அதேபோல், திருமலைகிரியில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவும், அடுத்த மாதம் நடக்க இருந்தது. நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்க இருந்த நிலையில், 144 தடை உத்தரவை காரணம் காட்டி, போலீஸ் துணை கமிஷனர் செல்வராஜ் விழா குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் விழாவை பின்னர் நடத்தி கொள்வதாக வாக்குறுதி அளித்தனர். இதனால், திருமலைகிரி பகுதியில் தேவையில்லாத அசம்பாவிதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் தையல்நாயகி உடனமர், வைத்தியநாதர் மற்றும் 63 நாயன்மார்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar