பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷ வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவில், ஐயப்பன் கோவில்களில் உள்ள சிவன் சன்னதிகளிலும், தேவம்பாடி அம்மணீஸ்வரர், ஜலத்துார் ஐயன், கப்பளாங்கரை பரமசிவன், ஜோதிநகர் ஜோதிலிங்கேஸ்வரர், பட்டணம் சிவன், பாலக்காடு சாலை லட்சுமி நரசிம்மர், கடைவீதி பெருமாள், நரசிம்மர் சன்னதியிலும், சிவன், அம்மன் மற்றும் நந்திக்கு, சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தன.