ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீ ஜானகியம்மாள் டிரஸ்ட் சார்பில் ஆண்டாள், ரெங்கமன்னார், வடபத்ரசயனர் மற்றும் ஆழ்வார்களுக்கு கூடாரைவெல்லும்சீர் உற்சவம் நடந்தது. இதையொட்டி புஷ்ப அலங்காரம் செய்யபட்டு,பாசுரங்கள் பாடி , பக்தர்களுக்கு அக்காரஅடிசல் பிரசாதம் வழங்கபட்டது. காட்டழகர் கோயில், ராக்காச்சியம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ராமானுஜம், வெங்கட், ஸ்ரீதரன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமானுஜம், பொருளாளர் வசந்தி செய்திருந்தனர்.