பதிவு செய்த நாள்
25
ஜன
2016
10:01
திருப்பதி: திருமலையில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று மாலை, கருடசேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, இரவு 7:00 மணிக்கு, மலையப்ப சுவாமி, பட்டாடை, தங்க, வைர நகைகள் அணிந்து, கருட வாகனத்தில், மாடவீதியில் வலம் வந்தார். இதை காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாடவீதியில் திரண்டனர். 1,500 வேதபாடசாலை மாணவர்கள், ரிக், யஜூர், சாம, அதர்வண வேதத்தை, பாராயணம் செய்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள், வேதபாடசாலை முதல்வர், வேத பண்டிதர்கள், திருமலை ஜீயர்கள் பங்கேற்றனர்.