தி மலை., அண்ணாமலையார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2016 10:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜன், குழந்தை வரம் வேண்டி அண்ணாமலையாரை பிரார்த்தனை செய்தபோது, அண்ணாமலையாரே அவருக்கு குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன. இந்நிலையில், அண்ணாமலையார் தைப்பூசத்தை முன்னிட்டு, ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்து கோவிலுக்கு திரும்பும்போது, வள்ளாள மஹாராஜா போரில் இறந்த செய்தியை அண்ணாமலையாரிடம் கூறும் நிகழ்ச்சியும், அதனால் மேளதாளம் இல்லாமல் அண்ணாமலையார் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.