சிதம்பரம் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2016 11:01
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த விபீஷ்ணபுரத்தில் ராமலிங்க சுவாமிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் தைப்பூச பெருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. திருவருட்பிரகாச வள்ளலார் அன்னதான அறக்கட்டளை மற்றும் சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் சிதம்பரம் சத்திய ஞானசபையில் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு மற்றம் சன்மார்க்க சிறப்பு சொற்பொழி நடைபெற்றது. தைப்பூச நாளான நேற்று காலை 5:00 மணிக்கு பக்தர்கள் அகவல் பாராயணம் வாசித்தல், வள்ளலார் திருவுருவத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைதொடர்ந்து காலை 6:30 மணிக்கு ஞானசபை பூசைகர் சிறப்பு பூஜை செய்து ஜோதி தரிசனம் நடந்தது. இதில் சிதம்பரம் சுற்றுவட்டார பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஞானசபையில் இசைக்கச்சேரி, வள்ளலார் மற்றும் சன்மார்க்கம் குறித்த சொற்பொழிவு நடைபெற்றது.
நடராஜர் கோவில்: தைப்பூசத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தது. இதனைதொடர்ந்து வியாக்கிரபாதர் முனிவருடன் நடராஜர் எழுந்தருளி வீதி புறப்பாடு செய்து பக்தர்களுக்கு காட்சியருளினார். பின்னர் கோவில் சிவகங்கை குளத்தில் வியாக்கிரபாதர் முனிவர், நடராஜர் எழுந்தருளி தீர்த்தவாரி மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.