பதிவு செய்த நாள்
25
ஜன
2016
11:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், மூன்று நாள் தெப்போற்சவம், நேற்று துவங்கியது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தெப்போற்சவம், ஆண்டு தோறும், தை பவுணர்மியன்று நடைபெறும். அதன்படி இந்தாண்டு, நேற்று மாலை, 6:30 மணியளவில், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன், திருவடி கோவிலுக்கு புறப்பாடு சென்றார். திரும்பி வந்து, ராஜகோபுரம் அருகில், பெருந்தேவி தாயாருடன் சேர்ந்து அனந்தசரஸ் தெப்பத்தில் எழுந்தருளினார். முதல் நாளான நேற்று, தெப்பத்தில் திருக்குளத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 8:00 மணியளவில் கண்ணாடி அறைக்கு திரும்பி சென்றார். இந்த உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். இன்று, திருக்குளத்தை ஐந்து முறை பெருமாள் தெப்பத்தில் சுற்றி வருவார்.