பதிவு செய்த நாள்
25
ஜன
2016
11:01
விருத்தாசலம்: தைப்பூசத்தையொட்டி, கொளஞ்சியப்பர் சுவாமிக்கு பால்குடம், காவடி சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று காலை சித்தி விநாயகர், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வெள்ளிக்கவசத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். தொடர்ந்து, காலை 7:30 மணியளவில் மணவாளநல்லுார் ஆற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து வந்தும், காலை 10:30 மணியளவில் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் இருமுடி, பால்குடம், காவடி சுமந்து ஊர்வலம் வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 4:00 மணியளவில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடந்தது.