சித்தானந்தா சுவாமி கோவில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2016 11:01
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவில் கும்பாபிஷேக பூஜைகள் நேற்று துவங்கியது. பாரதியின் பாடல் பெற்ற தலமாக சித்தானந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு, 1990ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது ரூ.3 கோடியில் கோவில் புதுப்பித்து, வரும் 29ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. காலை 7:00 மணிக்கு தேவதா அனுக்கை, மகா கணபதி ஹோமம், கோபூஜை, தட்சிணா மூர்த்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடந்தது.