பதிவு செய்த நாள்
25
ஜன
2016
12:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோவில்களில், தைப்பூச விழா சிறப்பு வழிபாடு நடந்தது. தை மாதம் வரும் பூச நட்சத்திர தினம், தைப்பூச விழாவாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானுக்கு உகந்த தினமான தைப்பூசத்தன்று, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொள்ளாச்சி சுப்பிரமணியர் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, காலை, 7:30 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், 8:30 மணிக்கு மகா தீபாராதனையும், மாலை, 6:30 மணிக்கு மேல், சுப்பிரமணியர் திருவீதியுலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தேவம்பாடி காளிபாளையம் சென்னியாண்டவர் கோவில் உள்ளிட்ட கிராமத்து முருகன் கோவில்களில், தைப்பூச வழிபாடு செய்து முடித்த பக்தர்கள், மாலையில் பழநியை நோக்கி திரளாக பாத யாத்திரை புறப்பட்டு சென்றனர். தேவனாம் பாளையத்தை அடுத்த குளத்துப்பாளையம் கரிவரதராஜபெருமாள் கோவிலிலும், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.