திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலையில் 30 கி.மீ., துõரத்தில் உள்ள வீரவநல்லுõர் அருகில் திருப்புடைமருதுõர் நாறும்பூநாதர் கோவில் உள்ளது. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இக்கோவிலில் சிவன் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். முற்காலத்தில் இக்கோவில் மருத மரங்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் இருந்தது. இங்கு சிவனை தரிசனம் செய்ய கருவூர் சித்தர் வந்தபோது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவரால் ஆற்றைக் கடந்து கோவிலுக்கு செல்ல முடியவில்லை. கரையில் நின்றபடியே கோவிலுக்கு வர அருளும்படி சிவனிடம் வேண்டினார். அப்போது மருத மலர்களின் மணம் வீசியது. அதை உணர்ந்த அவர், நறுமணமுடைய சிவனே! என்ற பொருளில், நாறும்பூ நாதா! நான் அங்கே வர வேண்டும் என சொல்லி பாடினார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன் வெள்ளத்தை நிறுத்தி கோவிலுக்குள் வர அருளினார். கருவூராரால் நறுமணம் மிக்கவர் என்று பாடப் பட்டதால் இவர், நாறும்பூ நாதர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு சந்தன தைலத்தால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. வெள்ளத்தால் பொருளை இழந்தவர்கள் இவரை வழிபட்டு நன்மை பெறலாம்.