திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: ஆயிரம் கலைஞர்கள் இசை அஞ்சலி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2016 11:01
தஞ்சாவூர், தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா ஆண்டு தோறும் ஜனவரி மாதம் நடை பெற்று வருகிறது. இந்த ஆண்டு 169 வது ஆராதனை விழா கடந்த 24ம் தேதி தொடங்கியது. அன்று கல்யாணபுரம் சீனிவாசன் கார்த்திகேயன் குழவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, காலை முதல் இரவு வரை பல்வேறு இசைகலைஞர்களின் கச்சேரிகள் தொடந்து நடைபெற்றது. கடந்த 27 ம் தேதி காலை தியாக பிர்ம்ம மஹோத்ஸவ சபையின் சஹஸ்ர நாம அர்ச்சனை போன்றவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய உஞ்ச விருத்தி பஜனை நிழ்வானது, தியாகராஜர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக புற ப்பட்டு முக்கிய வீதிவழியாக வந்து தியாகராஜருக்கு ஆராதனை பந்தலை அடைந்து.அங்கு பால், மஞ்சள் போன்ற பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, காலை 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜர் சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தினார். இதில், பாடகி ஷேபானா, மஹதி, சுதா ரகுராதன், அருண், நித்யஸ்ரீ மாகதேவன் போன்ற பல்வேறு பாடகர்கள், இசைகலைஞகர்கள் கலந்துக்கொண்டனார். அன்று இரவு திரைப்பட பின்னனி பாடகர் ஏசுதாஸ் பாடுகிறார். இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.