விருத்தாசலம்: சமயபுரம் மாரியம்மனுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு, ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணியும் நிகழ்ச்சி கடந்த 21ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது. நேற்று முக்கிய நிகழ்வாக குழந்தை பாக்கியம், தி ருமண வரம் வேண்டி பக்தர்கள் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, காலை 10:00 மணியளவில் மாலை அணிந்த ஆயி ரக்கணக்கான பக்தர்கள் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள விருத்தாம்பிகை சன்னதிக்கு வந்தனர். அங்கு, ஜெகமுத்து மாரியம்மன் எழுந்தருளியதும், பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டும், குழந்தை வரம் வேண்டிய பெண் பக்தர்கள் மடிப்பிச்சை எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.