பதிவு செய்த நாள்
28
ஜன
2016
11:01
உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, நேற்று அபிேஷக பூஜை நடந்தது. சங்கடஹர சதுர்த்தியையொட்டி, உடுமலை, முத்தையா பிள்ளை லே-அவுட்டில் உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று மாலை, 5:00 மணிக்கு, மூலவர் சக்தி விநாயகருக்கு, கணபதி ேஹாமும், உற்சவமூர்த்தி பால விநாயகருக்கு, அனைத்து அபிேஷகங்களும், கலசாபிேஷகமும் நடந்தது. மூலவருக்கு வெள்ளிக் கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் பாலவிநாயகர், சிறப்பு அலங்காரத்தில், கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏரிப்பாளையம், சேகர்புரத்தில் உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. உடுமலை, ஜி.டி.வி.லே-அவுட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், செல்வ விநாயகருக்கு நேற்று அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. தளி ரோடு, போடிபட்டியில் உள்ள, காரியசித்தி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. உடுமலை சாய்ராம் லே-அவுட், குமரன் லே-அவுட், வரசித்தி விநாயகர் கோவில், பழனியாண்டவர் நகர் சித்தி விநாயகர் கோவில், தீபாலபட்டி சக்தி விநாயகர் கோவில், ஜல்லிபட்டியில் உள்ள சர்வசித்தி விநாயகர் கோவில்களில், நேற்று மாலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது.