பதிவு செய்த நாள்
29
ஜன
2016
11:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கூரத்தாழ்வான் கோவில் தேர் திருவிழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது.காஞ்சிபுரம் அடுத்த, கூரம் பகுதியில், கூரத்தாழ்வானின் 1006வது அவதார உற்சவம் கடந்த 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலையிலும், மாலையிலும், சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணியளவில், கூரத்தாழ்வான் தேரில் எழுந்தருளினார். வீதிகளில் வலம் வந்து, மதியம் 1:00 மணியள வில், நிலைக்கு வந்தது. மாலை 3:00 மணிஅளவில், திருமஞ்சனம் திருப்பாவை சாற்று முறை நடைபெற்றது. தேர் திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.