பதிவு செய்த நாள்
30
ஜன
2016
12:01
உடுமலை: உடுமலை, தில்லை நகரில் அமைந்துள்ளது, சீரடி ஆனந்த சாய்பாபா கோவில். கோவிலில், வியாழன் தோறும், சுவாமி பல்லக்கு வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை, ஆரத்தி, அபிஷேக ஆராதனை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சத்யசாய் சேவா நிறுவனம் சார்பில், உடுமலை, டி.வி.பட்டிணம், சாய்ராம் லே–அவுட்டில் உள்ள சத்யசாய் ஆன்மிக மையத்தில், சத்யசாய் பஜனை நிகழ்ச்சி நடந்தது.