பதிவு செய்த நாள்
30
ஜன
2016
12:01
அவிநாசி: அவிநாசி அருகே மாகாளியம்மன், முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா, ஜன., 29 நடைபெற்றது.
சின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கருக்கம்பாளையத்தில், மாகாளியம்மன், முனியப்
பன் கோவிலில் திருப்பணி நிறைவுற்று, கும்பாபிஷேக விழா, 27ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோவில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு, நான்கு கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:30க்கு நிறைவுகால யாகசாலை பூஜை நடந்தது. 9:45க்கு, மூலவர் விமானம் மற்றும், விநாயகர், மாகாளியம்மன், முனியப்பன், கருப்பராயன், கன்னிமார் ஆகிய சன்னதிகளிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், சிறப்பு அபிஷேகம், அலங்கார மஹா தீபாராதனை நடைபெற்றது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம், ஸ்ரீமத்ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி அருளுரை ஆற்றினார். கருக்கம்பாளையம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.