பதிவு செய்த நாள்
30
ஜன
2016
12:01
ஆர்.கே.பேட்டை: பைவலசா கிராமத்தில் உள்ள, ஐந்து கோவில்களில், (ஜன.,29) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, பைவலசா கிராமத்தில், செல்வ விநாயகர், நவகிரகம், சீதா லட்சுமி உடனுறை ராமச்சந்திர சுவாமி, நுாக்காலம்மன், பொன்னியம்மன் உள்ளிட்ட ஐந்து கோவில்களில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 5:00 மணிக்கு, செல்வ விநாயகர் மற்றும் நவகிரக சன்னிதியிலும், அதை தொடர்ந்து ராமச்சந்திரசுவாமி, நுாக்காலம்மன் கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு, கிராமத்தின் கிழக்கே உள்ள பொன்னியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த புதன் கிழமை துவங்கியது. நேற்று முன்தினம், புதிய சிலைகள் கரிக்கோலம் ஊர்வலமும், அதை தொடர்ந்து, பிரதிஷ்டையும் நடந்தன. ஒரே நேரத்தில் கிராமத்தின் அனைத்து கோவில்களிலும் நடந்த கும்பாபிஷேகத்தால், கிராமம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.