பதிவு செய்த நாள்
30
ஜன
2016
12:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சமத்துாரில், வாணவராயர் பவுண்டேஷன் சார்பில், கொங்கு நாட்டு கால்நடை திருவிழா, துவங்கியது.
நேற்று மாலை, 5:00 மணிக்கு, 108 கால்நடைகளுக்கான, கோமாதா பூஜையை, பவுண்டேஷன் தலைவர் சங்கர் வாணவராயர் துவக்கி வைத்தார். ஈரோடு, காங்கேயம், திருப்பூர், கோவை, திண்டுக்கல், கரூர், கேரளா மாநிலம் பாலக்காடு, கொழிஞ்சாம்பாறை உட்பட பகுதிகளிலிருந்து, 700க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, கான்ட்ரீச் வகை கால்நடை, பரவசப்படுத்தியது. இன்று, காங்கேயம் கால்நடைகளுக்கும், சிறந்த ஹட்சப், ஜெர்ஸி, கெடேரிகளுக்கும் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்படுகின்றன. பண்ணைக் கருவிகளின் செயல் விளக்கம், பால் உற்பத்தி, சத்துாட்டம் உட்பட பல தலைப்புகளில், 40 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நிர்வாக அறங்காவலர் சங்கர் வாணவராயர் கூறுகையில், பொள்ளாச்சி கலாசாரம், மறைந்து வருவதுடன், கால்நடை வளர்ப்பும் குறைந்து வருகிறது. கால்நடை திருவிழாவுக்கு, மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. கால்நடை வளர்ப்பின் அவசியத்தை, இளைஞர்களும் தெரிந்து கொள்ள ஆர்வமாக வந்தனர், என்றார்.