பதிவு செய்த நாள்
30
ஜன
2016
12:01
புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் குரு சித்தானந்தா சுவாமி கோவில், ரூ. 3 கோடி செலவில் புனரமைத்து, 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. (ஜன.,29) காலை 4:00 மணிக்கு எட்டாம் கால யாகபூஜை நடந்தது. ரக்ஷாபந்தனம், தத்வாச்சார்ச்னை, நாடி சந்தானம் தீபாராதனை நடந்தது. 7:30 மணிக்கு கடம் புறப்பட்டு, 8:30 மணியளவில் மூலஸ்தான விமானங்கள், ராஜகோபுரங்கள், பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தேவசேனதிபதி குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். சபாநாயகர் சபாபதி, அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், அரசு செயலர் சுந்தரவடிவேலு, அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், கோவில் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலை 5:00 மணிக்கு, சித்தானந்தா சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது.