திருவேடகம்:சோழவந்தான் திருவேடகம் ஏலவார் குழலியம்மன், ஏடகநாதர் சுவாமி கோயிலில் தைப்பூச உற்சவத்தை முன்னிட்டு பிரம்மதீர்த்த தெப்பத்திருவிழா நடந்தது.
நேற்று முன்தினம் அம்மன், சுவாமி சர்வ அலங்காரத்தில் வீதி உலா வந்து பிரம்மதெப்பத்தில் எழுந்தருளினர். மாலை 6 மணிக்கு காளியம்மன் கோயில் முன், உலகநன்மைக்காக மகளிரணியினரின் திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு மின்விளக்கு புஷ்ப சப்பரத்தில் ராஜஅலங்காரத்தில் அம்மன், சுவாமி தெப்பத்தை சுற்றி வந்தனர். ஏற்பாடுகளை தெப்ப விழா கமிட்டியினர், நிர்வாக அதிகாரி சுமதி செய்திருந்தனர்.