தளவாய்புரம்: தேவதானம் மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேவதானம் மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 27 ம் தேதி துவங்கியது. 28 ல் இரண்டாம், மூன்றாம் காலயாக சாலை பூøஐகள் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு பாலசுப்பிரமணியன்சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மாரியம்மன், பத்திரகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் அம்மனுக்கு புஷ்பாஞ்சாலி நடந்தது. ஏற்பாடுகளை தேவதானம் இந்துநாடார் உறவின்முறை நாட்டாண்மை தங்கபாண்டியன், தர்மகர்த்தா ராமசாமி, பொருளாளர் சுந்தரேஸ்வரன் மற்றும் உறவின் முறை உறுப்பினர்கள்,திருப்பணிகுழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.