அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம், தேவனூர் முருகன் கோவிலில் தைப்பூசம் மற்றும் முத்துப்பல்லக்கு விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு 24 ம்தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பிற்பகலில் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், முதுகில் கொக்கி அணிந்து ஊர்வலமாக தேர் இழுத்து, தங்க ளது நேர்த்தி கடனை செலுத் தினர். அதனை தொடர்ந்து முத்துப்பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.