சேலம்: சேலத்தில், ஆண்டாள் கல்யாணத்தை முன்னிட்டு, பெருமாள் பஞ்ச கருட சேவையில் எழுந்தருளினார். ஆண்டாள் கல்யாண வைபவம், வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடக்கிறது. கல்யாணத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பெருமாள் பஞ்ச கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அந்த வகையில், நேற்று சேலம் கோட்டை பெருமாள், இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாரயணசாமி, செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி, சேலம் பாபா நாராயண வெங்கடாஜலபதி, சின்ன திருப்பதி வெங்கடாஜலபதி ஆகிய ஐந்து கோவில்களில் இருந்து, பெருமாள் உற்சவர்களுடன் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியானது சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.