பதிவு செய்த நாள்
02
பிப்
2016
11:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நாளை மறுநாள் (பிப்.4.,) ம் தேதி பூ அலங்காரத்துடன் மாசிப்பெருவிழா துவங்குகிறது.வரும் பிப்.4., ம் தேதி காலை 10 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும், மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், பூ அலங்காரமும் நடைபெறும். பிப்.5.,ம் தேதி காலை 9 மணிக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி, பிப்.7., இரவு 8 மணிக்கு சாட்டுதல், பிப்.9., காலை 12 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பிப்.12., மதியம் 2 மணிக்கு நாகல் நகர் புறப்பாடு, பிப்.19., இரவு 8 மணிக்கு அம்மன் திருத்தேர் உலா, பிப்.20., இரவு 10 மணிக்கு தசாவதாரம், பிப்.21., காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், பிப்.21., மாலை 5 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவுக்கு வருகிறது. பிப்.22., இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், பிப்.23., மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். மேலும், விழாவில் தினமும் இரவு 9 மணிக்கு கோயில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.