பதிவு செய்த நாள்
02
பிப்
2016
11:02
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ,ஆர்.சி.டி.சி., சார்பில், பீம்சங்கர், சோம்நாத், மகா காலேஸ்வர், ஓம்காரேஸ்வர், திரையம்பகேஸ்வர், குருஸ்னேஸ்வர், அவுங்நாக்நாத், பார்லி, வைத்யநாத், ஸ்ரீசைலம் ஆகிய நவ ஜோதிலிங்க தலங்களுக்கு, யாத்திரை சுற்றுலா ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில், மார்ச், 1ம் தேதி புறப்படும்; இதற்கான கட்டணம், 13 ஆயிரத்து, 270 ரூபாய். ஷீரடி தரிசனம்: ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் சுற்றுலா ரயில், மார்ச், 15ம் தேதி புறப்படுகிறது. இது, ஏழு நாள் யாத்திரை; கட்டணம், 5,805 ரூபாய்; தங்கும் அறை, சைவ உணவு, சுற்றி பார்க்க பஸ் மற்றும் ரயில் கட்டணம் அடங்கும். சென்னை, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் ஏறலாம். மேலும் விவரங்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., 98402 44015, 99629 44015 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -