திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கோழியூரில் உலக அமைதிவேண்டி பக்தர்கள் மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திட்டக்குடி அடுத்த கோழியூர் மாரியம்மன் கோயிலில் சுமங்கலி பெண்கள் நாடு நலம் பெற வேண்டும், உலக அமைதி மற்றும் மத நல்லிணக்கம் வேண்டியும் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு நடைபெற்று சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜை நடந்தது. அதனையடுத்து சுவாமி வீதியுலா வந்தது.