பதிவு செய்த நாள்
02
பிப்
2016
11:02
சென்னை: பெரும்பாக்கம், பழண்டியம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.பெரும்பாக்கம், பழண்டியம்மன் கோவிலில், லஷ்மி கணபதி, மேத்த தட்சிணாமூர்த்தி, பக்த ஆஞ்சநேய சுவாமிகளுக்கு, நுாதன ப்ரதிஷ்டாபன சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி, நாளை காலை 6:00 மணி முதல், 7:30 மணிக்குள், கோ பூஜை, கஜ பூஜை, ப்ராண ப்ரதிஷ்டை, நாடி சந்தானம், லஷ்மி கணபதி, விசேஷ ஹோமம், தம்பதி பூஜை, அஷ்டபந்தன சமர்ப்பணம், மஹா பூர்ணாஹூதி, அபிஷேகம் ஸம்ப்ரோக்ஷண வைபவங்கள் நிகழ உள்ளன.