பதிவு செய்த நாள்
03
பிப்
2016
03:02
நாகை: குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூரை அடுத்த மேலையூரில் அமைந்துள்ள சித்தி விநாயகர், மகா மாரியம்மன், மகா காளியம்மன் கோயில்களில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வௌ;ளிக்கிழமையன்று அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் ஆகியவை செய்யப்பட்டது. தொடர்ந்து கோபூஜை, தனபூஜை ஆகியவை செய்யப்பட்டது. ஆறு கால பூஜையின் நிறைவில் பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று, கடம் புறப்பட்டது. சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து, மேளதாளங்கள் முழங்க, கோயிலை சுற்றி வந்து, விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேதவிற்பன்னர்கள் வேதங்கள் முழங்க, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாதிரிமங்கலம் மயூரநாத சிவாச்சாரியார் மற்றும் தேரழுந்தூர் ராஜமணிகண்ட சிவாச்சாரியார் சர்வசாதகம் செய்து வைத்தனர். அதைத் தொடர்ந்து மூலஸ்தான மஹாமாரியம்மனுக்கும், பாணீவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தாணீசனம் செய்தனர்.