Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ்க் கடவுள் முருகன் பெயர்கள்! திருமணத் தடை நீங்க எளிய பரிகாரங்கள்! திருமணத் தடை நீங்க எளிய பரிகாரங்கள்!
முதல் பக்கம் » துளிகள்
இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு வரும் செய்ய வேண்டிய 5 வித யாகங்கள்!
எழுத்தின் அளவு:
இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு வரும் செய்ய வேண்டிய 5 வித யாகங்கள்!

பதிவு செய்த நாள்

03 பிப்
2016
03:02

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால அரசர்களோ பல யாகங்கள் செய்து தங்கள் இராஜ்ஜியங்களையும், படை வலிமைகளையும் பெறுக்கிக் கொண்டனர். யாகங்களால் இவை மட்டுமல்ல, பெறுதற்கரிய பிறவிப் பேறும் பெற முடியும். வாழ்க்கையில் யோகிகள் மட்டுமல்ல, இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய சில யாகங்கள் உண்டு.

இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு வரும் தினமும் செய்ய வேண்டிய 5 வித யாகங்களை கீழ்க் கண்டவாறு பெரியோர்கள் வகுத்துள்ளனர்.

1. தேவயாகம், 2. பூத யாகம், 3. மனித யாகம், 4. பிரம்ம யாகம், 5. பிதுர் யாகம்.

தேவ யாகம்: ஒவ்வொருவரும் தினம் ஏதாவது ஒரு தெய்வத் திருமேனியைத் தரிசித்து வணங்க வேண்டும்.

பூத யாகம்: ஒவ்வொருவரும் தினமும் ஒரு பிராணிக்கு (பசு ,பூனை, காகம், நாய், எறும்பு, குருவி, குரங்கு, பட்சி ஆகிய ஏதாவது ஓர் உயிரினத்துக்கு) ஒரு பிடி உணவு அளிக்க வேண்டும்.

மனித யாகம்: தினமும் ஒரு ஏழை மனிதனுக்கு உணவளித்து வாழ்தல் மனித யாகம்.

பிரம்ம யாகம்: அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது பிரம்ம யெக்கியமாகும்.

பிதுர் யாகம்: நம்முடைய காலஞ்சென்ற மூதாதையர்களுக்கு அர்ப்பணம் செய்தல், தீபம் ஏற்றல் முதலியவற்றைத் தவறாமல் செய்வது பிதுர்யாகம். யாகம் செய்வதனால் பயன் உண்டா? என்றும் பஞ்சயெக்கியம் என்பது என்ன? என்றும் பலருக்கு தெரியாது தெரியாததை புரிய வைப்பது தானே நம் வேலை. யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப்பணித்தல் ஆகும். நம்மிடம் உள்ள பொருட்களில் புனிதமானவைகள் என கருத கூடியதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே யாகம் ஆகும். அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால் தாய் சந்தோஷப்பட மாட்டாளா? அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே கொடுக்கிறோம். அம்மா கட்டி பிடித்து முத்தம் தருவது போல் கடவுளும் நமது பிராத்தனைக்கு எதாவது தருவார். அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை தர்மகாண்டத்தில் பேசுகிறது. பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்காயாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar