உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2026 12:04
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோத்ஸசவ விழா ஏப்., 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜ பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
காலை, மாலை என இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து, இக்கோவிலில் 10 நாட்கள் பிரம்மோத்ஸவம் நடக்கும்.
26ல் கருடசேவை நிகழ்ச்சியை தொடர்ந்து, 30ம் தேதி திருத்தேர் உத்சவம் நடக்கிறது.
அதையடுத்து வாகனத்தில் சுவாமி எழுந்தருளி உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள, வைகுண்ட பெருமாள் கல்வெட்டு கோவிலில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் நெய் வைத்தியம் மற்றும் தீபாரதனை முடித்து சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பஜார் வீதி வழியாக வலம் வந்த சுவாமியை, பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.