பதிவு செய்த நாள்
04
பிப்
2016
01:02
மாமல்லபுரம்:திருப்போரூர், கந்தசாமி கோவில் உண்டியலில், 27.81 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 23ம் முதல், நேற்று முன்தினம் வரை, பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை, உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் நற்சோனை ஆகியோர் மேற்பார்வையில், நேற்று முன்தினம் கணக்கிடப்பட்டது. அதில், 27 லட்சத்து, 81 ஆயிரத்து, 778 ரூபாய் ரொக்கம்; 101 கிராம் தங்கம்; 2.850 கி.கி., வெள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.