பதிவு செய்த நாள்
04
பிப்
2016
01:02
உடுமலை: திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், பிப்ரவரி 26 ம் தேதி நடைபெறும் என, அமணலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்கள் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த 2002ம் ஆண்டு நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்து, 13 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோவில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 26ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமணலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிச் செல்வன் கூறுகையில்,கோவில் கும்பாபிஷேக பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகன் சன்னதிகள் மராமத்து பணிகள் நடந்து வருகின்றன. வர்ணம் பூசுதல், கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன, என்றார்.