Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் முத்துமாரியம்மன் கோவிலில் ... திருக்கோஷ்டியூரில் மகாமகம் தெப்ப உற்சவம் ஏற்பாடு ஆலோசனை எப்போது? திருக்கோஷ்டியூரில் மகாமகம் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மக்கள் தொகையில் சிற்றூர்.. கோவில்களால் பேரூர்!
எழுத்தின் அளவு:
மக்கள் தொகையில் சிற்றூர்.. கோவில்களால் பேரூர்!

பதிவு செய்த நாள்

06 பிப்
2016
11:02

உடுமலை: திரும்பிய பக்கமெல்லாம், கோவில்கள் அமைந்து, பழங்காலத்தில் சிறப்பு பெற்றிருந்த ஒரு கிராமம், தற்போது சிற்றூராக மாறியுள்ளது.  தங்கள் கிராமத்துக்கான வரலாற்றை வெளிப்படுத்த, ஆய்வுகள் நடத்த வேண்டும் என்பது அக்கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  உடுமலை –  செஞ்சேரிமலை ரோட்டில், அமைந்துள்ள கிராமம் குறிஞ்சேரி. இக்கிராமத்தில், திரும்பிய பக்கமெல்லாம் பழங்கால கோவில்கள் காணப்படுகின்றன.  கிராமத்தை சுற்றிலும், உப்பாறு உட்பட ஓடைகள் சென்றாலும், எந்த காலத்திலும் மழை வெள்ளம் குடியிருப்புக்குள் வந்ததில்லை என கிராம மக்கள்  தெரிவிக்கின்றனர்.

கிராமத்தில், பழமை வாய்ந்த, பூமிலட்சுமியம்மன், மாகாளியம்மன், குறிஞ்சேரியம்மன், விநாயகர்,  பாலமுருகன் உட்பட கோவில்கள் அமைந் துள்ளன. இதில், குறிஞ்சேரியம்மன் கோவில், கோபுரம், முன்மண்டபம் ஆகியவை அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில், பல் வேறு சிலைகள் சிதைந்த நிலையில் கிடக்கின்றன. இதே போல், கிராமத்தின் மையப்பகுதியில், அரச மரத்தின் அருகில் அமைந்துள்ள விநாயகர்  மற்றும் பாலமுருகன் கோவில், பராமரிப்பு இல்லாமல், பாழடைந்து வருகிறது. பெரிய கற்களால், கட்டப்பட்ட, சுவரில், விரிசல் ஏற்பட்டதில், பல்÷ வறு சிற்பங்களும் சிதிலமடைந்து வருகின்றன. கோவிலின் வெளிப்புறத்தில், 4 அடி உயர சிலை பராமரிப்பு இல்லாமல், பரிதாப நிலையில் உள்ளது.  இக்கோவில்களை பராமரிக்க, இந்து அறநிலையத்துறைக்கு கிராம மக்கள் சார்பில், பல முறை கோரிக்கை விடப்பட்டும், நடவடிக்கை இல்லை.  கிராமத்தின் சிறப்பாக, பூமித்தாய்க்கு என தனியாக கோவில் இருப்பதுதான். பழமை வாய்ந்த கோவிலில் தற்போது சிறப்பாக பல்வேறு வழிபாடுகள்  மேற்கொள்ளப்படுகின்றன. கோவிலின் அருகில், ரோட்டோரத்தில், பழங்கால ஆட்சியாளர்களின் சிலை மண்ணில் புதைந்து காணப்படுகிறது. சி லைக்கு எதிராக இருந்த கல்துாணில் இருந்த கல்வெட்டு சிதிலமடைந்துள்ளது. கிராமத்திலுள்ள சில வீதிகளிலும், சில கோவில்கள் உள்ளன.  இவ்வாறு, மக்கள் தொகையில், சிற்றூராக இருந்தாலும், கோவில்கள் எண்ணிக்கையில், பேரூராக உள்ள குறிஞ்சேரி கிராமத்தில், தொல்லியல்  துறையினர் ஆய்வு நடத்தி, வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அக்கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar